Indian 2: சுற்றி வளைத்த கிராமத்தினர், தவித்த படக்குழு, குவிந்த போலீசார்: இந்தியன் 2 ஷூட்டிங்கில் பரபரப்பு

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே படப்பிடிப்பை துவங்கி நடத்தினார்கள். ஆனால் செட்டில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியானதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் படப்பிடிப்பை துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் ஷங்கர். திருப்பதி, கடப்பாவில் சில காட்சிகளை படமாக்கினார்கள். திருப்பதி ஷூட்டிங்கிற்கு கமல் ஹாசன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.

திருப்பதியை அடுத்து செங்கல்பட்டு, பனையூர் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் சதுரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள டச்சுக்காரர்கள் கோட்டையில் சில சண்டை காட்சிகளை படமாக்கினார் ஷங்கர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நேற்று முன்தினத்தோடு செங்கல்பட்டு ஷெட்யூல் முடிந்தது. ஆனால் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது கிராமத்து மக்கள் அங்கு கூடினார்கள். மேலும் கோவிலுக்கு நன்கொடை கொடுத்துவிட்டுத் தான் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என படக்குழுவினரை வற்புறுத்தினார்கள்.

இதனால் படக்குழுவுக்கும், கிராமத்து மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கிராமத்து மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போக போலீசாருக்கு தகவல் கொடுத்தது படக்குழு. தகவல் அறிந்ததும் உடனே ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு வந்த போலீசார் சமரசம் பேசினார்கள்.

யாரையும் கட்டாயப்படுத்தி நன்கொடை கொடுக்குமாறு சொல்ல முடியாது. அவர்களாக விருப்பப்பட்டு கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் நன்கொடை கேட்டு பிரச்சனை செய்வது சரியல்ல என கிராம மக்களை விரட்டியிருக்கிறார்கள் போலீசார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பையும் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் தவித்தார்கள்.

இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். ப்ரியா பவானிசங்கர், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

முன்னதாக இந்தியன் 2 பட செட்டில் விபத்து ஏற்பட்டபோது கமல் ஹாசனும், காஜல் அகர்வாலும் நூலிழையில் உயிர் தப்பினார்கள். படப்பிடிப்பு துவங்கியபோது குமாரியாக இருந்தார் காஜல் அகர்வால். படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தில் திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிவிட்டார்.

AK62:த்ரிஷா, நயன்தாரா வேண்டாம், காந்தக் கண்ணழகியை அஜித் ஜோடியாக்கும் லைகா?

இதற்கிடையே மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. அந்த படத்திற்கு ஹீரோயினை தேர்வு செய்யாமல் இருந்தார்கள். இதையடுத்து இந்தியன் 2 ஹீரோயினான காஜல் அகர்வாலையே அஜித் குமாருடன் சேர்ந்து நடிக்க வைக்கலாமே என லைகா நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறதாம்.

பணம் போடுபவர்களே சொல்லவிட்டதால் அஜித் பட ஹீரோயின் காஜல் அகர்வாலாகத் தான் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.