டெல்லி: ஆளுநர்களை நியமிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை கலந்தாலோசிப்பது ஒரு மரபாக வேண்டுமானால் பின்பற்றப்படலாம் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார். இதற்காக அரசியல் சாசன சட்டம் 155 பிரிவில் திருத்தும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
