கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தொடர் திரட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தன. இதனை தொடர்ந்து சம்பவ இடங்களில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளின் வீடியோவை ஆராய்ந்த போலீசார் இந்த தொடர் திரட்டில் ஈடுபட்டது கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான அறிவழகன் என்பதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் பல்வேறு வீடுகளில் தனது கைவரிசையை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் உள்ளவற்றையும், 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்து கொண்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.