நடிக்க விருப்பம் இல்லாததால் கை உடைந்ததாக பொய் சொன்னாரா பிரபல பிரெஞ்சு நடிகை?: வழக்குத் தொடர்ந்ததால் நடிகைக்கே பிரச்சினை


ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லாததால், தன் கை உடைந்ததாக பொய் சொன்னார் என பிரபல பிரெஞ்சு நடிகை மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


வழக்குத் தொடர்ந்த நடிகை

பிரபல பிரெஞ்சு நடிகையான ஈவா கிரீன் (Eva Green, 42), தான் நடிக்க இருந்த A Patriot என்னும் திரைப்படம் கைவிடப்பட்டதால், நஷ்ட ஈடு கோரி White Lantern Film என்னும் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்.

ஒப்பந்தப்படி, அந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சம்பளமாக பேசப்பட்ட 810,000 பவுண்டுகளை கொடுக்கவேண்டும் என்று கோரி அவர் வழக்குத் தொடர்ந்தார். 

நடிக்க விருப்பம் இல்லாததால் கை உடைந்ததாக பொய் சொன்னாரா பிரபல பிரெஞ்சு நடிகை?: வழக்குத் தொடர்ந்ததால் நடிகைக்கே பிரச்சினை | Did The Famous French Actress Lie

Image:- sky news

 நடிகை மீதே குற்றம் சாட்டிய தயாரிப்பு நிறுவனம்

ஆனால், ஈவா அந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறியுள்ள அந்த தயாரிப்பு நிறுவனம், அவர் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

ஈவா, தான் கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு கதையை உருவாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது அந்நிறுவனம்.

அத்துடன், தனக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் தன்னால் நடிக்கவரமுடியாது என்று கூறிவிடலாமா என ஈவா தனது ஏஜண்டிடம் ஆலோசனை கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஈவா தரப்பு, இது ஈவாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

நடிக்க விருப்பம் இல்லாததால் கை உடைந்ததாக பொய் சொன்னாரா பிரபல பிரெஞ்சு நடிகை?: வழக்குத் தொடர்ந்ததால் நடிகைக்கே பிரச்சினை | Did The Famous French Actress Lie

Image:- sky news



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.