பலாலி பகுதியில் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களின் மீள் குடியமர்வுக்கான திட்டம்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களின் மீள் குடியமர்வுக்கான திட்டத்தை யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் ஆகியன முன்னெடுத்து வருகின்றன.

பலாலி பகுதியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி மீள் குடியமர்வுக்கான வசதிகளை மேற் கொள்வதற்காக  108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் மீள் குடி யேற்றத்தை விரைவுபடுத்தும் முகமாகவும் மீள்குடியேற்ற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முகமாக  அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்கான அதிகாரிகளின் மேற்பார்வை விஜயம் நேற்று (14) இடம்பெற்றது.

குறித்த விஜயத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சிவசிறி,பலாலி கிரமசேவகர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.