திருவனந்தபுரம், : தொடுபுழாவை சேர்ந்த லிஜி, 38, என்பவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 28 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
நேற்று இவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் அங்கு குழந்தை இறந்தது. இந்த சோகத்தில் இருந்த லிஜி, குடும்பத்தினர் சர்சுக்கு சென்ற போது, 7 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement