செக்ஸ் வீடியோக்களுக்கு லைக் போடும் திமுக எம்எல்ஏ..? டெலிட் ஆன ட்விட்டர் அக்கவுண்ட்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணனின் ட்விட்டர் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரில் இதுகுறித்த காரணத்தை திலீபன் என்பவர் ஷேர் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற திமுக எம்எல்ஏ மணிகண்ணன் ட்விட்டரில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதற்கு வரிசையாக லைக் போட்டுள்ளார். அதை கவனித்த திலீபன் என்பவர் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து எம்எல்ஏ மணிகண்ணனின் ட்விட்டர் அக்கவுண்டை தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை. இந்த விஷயம் அம்பலமானதும் அவரது அக்கவுண்டை டெலிட் செய்துவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். திலீபனின் ட்விட்டர் பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை

எம்எல்ஏ ட்வீட்டர் பக்கத்தில் முழுவதும் ஆபாச காணொளிகளுக்கு லைக்ஸ் போட்டு வைத்துள்ளார் பொதுவெளியில். இவர்கள் தான் ஊருக்கு நாகரீக வகுப்பெடுக்கின்றனர். இது தான் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மக்கள் சேவை” என விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பிரபல யூடியூபர்ஸ்களின் வீடியோக்களை மதன் ரவிச்சந்திரன் ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திமுக எம்எல்ஏ ஆபாச படங்களுக்கு லைக் செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து அவரது அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒரு பக்கம் பேசு பொருளாகியுள்ளது.

இதேபோல கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎஸ்பி பொறுப்பில் உள்ளதாக குறிப்பிட்டு ‘இலக்கியா தர்மா’ என்ற பெயரில் ஒரு அக்கவுண்ட் இருந்தது. அந்த பெண் டிஎஸ்பி அக்கவுண்டில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் ஆகியோரின் போஸ்டுகளுக்கு தொடர்ந்து லைக்ஸ்கள் போடப்பட்டு வந்துள்ளன. அதை ஸ்கிரீன் ஷாட்டுகள் எடுத்து பகிரப்பட்ட உடனே அந்த அக்கவுண்டும் டெலிட் ஆனது. பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் ட்விட்டரில் இவ்வாறு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் பின்னர் அந்த அக்கவுண்ட் டெலிட் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

எம்எல்ஏ மணிகண்ணன் திருநாவலூர் தொகுதியில் 1996 – 2001 வரை எம்எல்ஏ-வாக இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.