பிரித்தானிய பட்ஜெட்: புலம்பெயர்ந்தோர் குறித்து பட்ஜெட் என்ன சொல்கிறது?



பிரித்தானிய சேன்ஸலாரான ஜெரமி ஹன்ட், நேற்று, அதாவது, மார்ச் 15 அன்று, தனது 2023 வசந்த கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சேன்ஸலரின் முதல் பட்ஜெட்

சேன்ஸலர் ஜெரமி ஹன்டின் முதல் பட்ஜெட்டில், வரிகள், ஆற்றல், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக துணை வணிகம், வேலைவாய்ப்பு – அதிகமானவர்களை வேலைக்குச் செல்ல ஊக்கப்படுத்துதல், கல்வி – திறன்களை மக்களுக்கு வழங்குதல், எல்லா இடங்களிலும் – இங்கிலாந்து முழுவதும் வளர்ச்சி ஆகிய விடயங்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன. 

புலம்பெயர்ந்தோர் குறித்து பட்ஜெட் என்ன சொல்கிறது?’

சமீப காலமாக பிரித்தானியாவில் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் குறித்த விடயங்கள் முக்கிய இடம் வகித்துவரும் நிலையில், பட்ஜெட்டில் புலம்பெயர்தல் குறித்து ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்பதை அறிய பலரும் ஆவலாக உள்ளார்கள்.

ஆனால், பட்ஜெட்டில், புலம்பெயர்ந்தோரைக் குறித்து, கவனம் ஈர்க்கும் வகையில் ஒரே ஒரு விடயம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அது என்னவென்றால், பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக, கட்டுமானத்துறையில் உள்ள ஐந்து வேலைகளில் புலம்பெயர்தல் விதிகள் நெகிழ்த்தப்பட உள்ளன என்பதாகும்.

சற்று விளக்கமாகக் கூறினால், கூடுதல் கட்டுமானப் பணியாளர்களை பிரித்தானியாவுக்குள் அனுமதிப்பதற்காக, விசா விதிகள் நெகிழ்த்தப்பட உள்ளன.

குறிப்பாக, கூரை போடுபவர்கள், பிளம்பர்கள், கொத்தனார்கள், மரவேலை செய்வோர் மற்றும் சிமெண்ட் பூசுவோர் ஆகியோருக்கான விதிகள் நெகிழ்த்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

வீடியோவை காண



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.