சென்னை: மொழித் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகள் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அதற்கான காரணத்தை அறிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணங்களை அறிய வரும் அதிகாரிகளுடன் பெற்றோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
