ஒரு புத்தம் புதிய ஆடையினை ஒரு தடவை மாத்திரமே அணிந்திருப்போம்.
ஏதேனும் அழுக்கு பட்டு அது அடுத்த தடவை அணிய முடியாதபடி ஆகியிருக்கும்.
இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்.
வீட்டில் அடிக்கடி சேரும் ஒரு சில விடாப்பிடியான அழுக்குகளை அகற்றவும் இந்த டிப்ஸ் உதவும்.
- உங்களது வெள்ளை ஆடையில் தேனீரோ அல்லது வேறேதும் ஆழமான கரை பட்டுவிட்டால் உடனே பேபி பவுடரை அதன் மேல் பரப்பி அதனை பற்தூரிகை கொண்டு தேய்த்து பின் சற்று நேரத்தில் கழுவிடுங்கள்.
- உங்கள் ஆடையிலோ அல்லது சிறுவர்களின் சீருடையிலோ பேனா மை பட்டுவிட்டால் அதனை பற்பசை கொண்டு தேய்த்து கழுவிடலாம்.
- உங்கள் உடையில் மஞ்சள் கரையோ அல்லது சாப்பாடு கரையோ பட்டுவிட்டால் துணிகளுக்கான ப்லீச் ஐ அதன்மேல் ஊற்றி பின் அதனை தண்ணீர் மற்றும் சவற்கார தூள் கலந்து கழுவி விடலாம்.
- ஆடையில் உதட்டுசாயம் பட்டுவிட்டால் அதனை பேபி ஷாம்பு போட்டு பற்தூரிகை கொண்டு அந்த இடத்தில மாத்திரம் தேய்த்து தண்ணீர் விட்டு பின் மீண்டும் தேய்த்து கழுவ அந்த கரை காணாமலே போய்விடும்.
- ஆடையில் எண்ணெய் கறை பட்டுவிட்டால், அதனை பேபி பவுடர் போட்டு தேய்த்து இளம் சூட்டில் உள்ள நீரில் சவர்க்காரத்தூள் மற்றும் வினாகிரி சேர்த்து 2-3 மணி நேரம் ஊற வைத்து கழுவ கறை நீங்கும்.
- எண்ணெய் கரையினை நீக்க அதன் மேல் உப்பு போட்டு பின் இளம் சூடுள்ள தண்ணீரில் பேக்கிங் சோடா மற்றும் சவற்கார தூள் போட்டு அதற்குள் இந்த ஆடையினையும் 2-3 மணி நேரம் ஊறவிட்டு கழுவ வேண்டும்.
- கால் துடைப்பாண் மிகவும் அழுக்காக இருந்தால் அதன் மேல் பேக்கிங் சோடாவை போட்டு அதனை வாக்யும் கிளீனரை வைத்து சுத்த படுத்தி விடலாம்.
- மின்னழுத்தியில் ஒரு சில நேரங்கலில் கருப்பு கறை ஒட்டியிருக்கும் அதனை பற்பசை போட்டு தேய்த்தால் போய்விடும்.
- குழாய்களில் இருக்கும் சில கறைகளை திசு பேப்பர் கொண்டு துடைத்து விடலாம்.
- கண்ணாடி கோப்பைகளை வினிகர் கொண்டு புத்தம் புதிது போல மாற்றலாம்.
- முகம் பார்க்கும் கண்னாடிகளிலுள்ள அழுக்கினை கரும்பலகை சாக் கொண்டு சுத்த படுத்தமுடியும்.
- கண்ணாடி கோப்பைகளுள்ள தேநீர் கறைகளை வினிகர் மற்றும் பேக்கிங் சோடா மூலம் சுத்த படுத்த முடியும்.
- உங்களது கட்டில் மெத்தை அழுக்காக இருந்தால் அதன் மேலே பேக்கிங் சோடாவை தூவி 5 நிமிடத்தின் பின் சுத்த படுத்தினால் அழுக்குகள் மறையும்.
- தண்ணீரில் வினிகர் சேர்த்து அதனுள் பற்தூரிகையை இட்டால் இக்கலவை தூரிகையிலுள்ள பக்டீரியாவை கொன்றுவிடும்.
- உங்கள் தொலைப்பேசி ஸ்கிறினை பேபி பவுடர் போட்டு துடைத்தால் சுத்தமாகும்.
- உங்கள் வெள்ளி நகைகளை சுடுதண்ணீரில் ஈயம் மற்றும் பாத்திர,ம் கழுவும் சவர்க்காரம் போட்டு நன்றாக கொதிக்க விட்டு எடுத்து பின் தூரிகையினால் கழுவினால் புதிது போல ஆகி விடும்.
- உங்கள் ஆடைகளில் உள்ள அதிகமான வூலை bic erasor கொண்டு சுத்தப்படுத்தமுடியும்.
- காப்பெர் கோப்பைகளை பற்பசை கொண்டு தேய்த்து கழுவினால் சுத்தமாகும்.
- சீப்பினை சுத்தம் செய்ய தண்ணீரில் வினிகர் போட்டு ஊறவைத்தால் அதில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.
- எண்ணெய் தரையில் கொட்டிவிட்டால் உப்பு கொஞ்சம் தூவி சுத்தப்படுத்தலாம்.