தேனி மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
கல்வி தகுதி:
•10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள்,
•பிளஸ்-2,
•ஐ.டி.ஐ.,
•பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு.
•இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர நகல், கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.
•மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.