நாமக்கல்: நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர் குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசும், காவல்துறை யினரும் வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக தெரிவித்து உள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது சில இடங்களில் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. முதன்முதலில் திமுகவும் சில அரசியல் கட்சிகள் மட்டுமே வடமாநிலத்தவர்கள் […]
