புதுடில்லி :புதுடில்லியில் வேலைக்கான நேர்காணலுக்கு சென்ற மருமகளை, அவரது மாமனார் சாலையில் விரட்டி விரட்டி செங்கல்லால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
புதுடில்லியின் உள்ள பிரேம் நகரில், பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார்.
இவரது குடும்பம் பொருளாதார சிக்கலில் தவித்து வருவதால், இவரது மனைவி காஜல், 26, தன் கணவருக்கு உதவு வதற்காக வேலைக்குச் செல்ல முடிவு செய்தார்.
நேற்று இதற்கான நேர்காணலில் பங்கேற்க சென்ற இவரை பின் தொடர்ந்து சென்ற பிரவீன் குமாரின் தந்தை வழிமறித்து, வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கையில் இருந்த செங்கல்லால் காஜலின் தலையில் பயங்கர மாக தாக்கினார். தப்பி ஓடிய காஜலை விடாமல் துரத்தி சென்று மீண்டும் தாக்கினார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஜலுக்கு, 17 தையல்கள் போடப்பட்டன.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, இதன் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காஜலின் மாமானாரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement