61 பந்தில் 119 ஓட்டங்கள்! ஒருநாள் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய வீரர்


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

கடைசி ஒருநாள் போட்டி

சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 260 ஓட்டங்கள் எடுத்தது.

பிரண்டன் கிங் 72 ஓட்டங்களும், பூரன் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜென்சென், போர்டுன் மற்றும் கோட்ஸி தலா இரண்டு விக்கெட்டுகளும், மார்க்ரம், இங்கிடி மற்றும் பர்னெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பிரண்டன் கிங்/Brandon King

@AP Photo/Themba Hadebe

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

கிளாஸன்/Klaasen

@REUTERS/Siphiwe Sibeko

கிளாஸன் விஸ்வரூப ஆட்டம்

கேப்டன் மார்க்ரம் 25 ஓட்டங்களில் வெளியேறினார். 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹென்ரிச் கிளாஸன் வாணவேடிக்கை காட்டினார்.

சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டு எதிரணி மிகுந்த நெருக்கடி கொடுத்தார்.

அவருக்கு துணையாக ஜென்சென் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தார். இவர்களது கூட்டணி 103 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தது.

கிளாஸன் அதிரடியாக 61 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் அவர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டி20 தொடர் 25ஆம் திகதி தொடங்குகிறது.  





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.