குளிர்பான பெட்டியை திருடிய ராட்ஷச முதலை! உறைந்து போன சுற்றுலா பயணிகள்: வீடியோ


சமீபத்தில் முதலை ஒன்று சுற்றுலா வந்த நபர்களிடம் இருந்து உணவு மற்றும் குளிர்பான பெட்டியை திருடிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


முதலையின் வைரல் வீடியோ

பொதுவாக சுற்றுலா பயணிகளிடம் இருக்கும் பொருட்களை குரங்குகள், பறவைகள், சில சமயங்களில் குதிரைகள் கூட லாபகமாக திருடிச் செல்வதை பல்வேறு சமூக வலைதள வீடியோவில் பார்த்து இருப்போம்.

ஆனால் தற்போது முதலை ஒன்று சுற்றுலா பயணிகளுடைய உணவு பொருட்களை திருடிச் செல்வதை சமூக வலைதள வீடியோ ஒன்று காட்டுகிறது.

சிறிய மற்றும் பயமுறுத்தும் வீடியோவில், வலிமைமிக்க முதலை ஒன்று தண்ணீரில் இருந்து வெளிப்பட்டு, எந்த சேதமும் இல்லாமல் சுற்றுலா பயணியின் குளிர்சாதன பெட்டியை திருடிக் கொண்டு குளத்துக்குள் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


குவியும் கமெண்ட்கள்

இந்த வீடியோ கிளப் பகிரப்பட்டதில் இருந்து இதுவரை 1.5 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

குளிர்பான பெட்டியை திருடிய ராட்ஷச முதலை! உறைந்து போன சுற்றுலா பயணிகள்: வீடியோ | Hungry Crocodile Steals Cooler Box Video

அத்துடன் இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், குளிர்பான பெட்டியில் உள்ளதை முதலைகள் விரும்புகிறது என கூறி சிரிக்கும் முகங்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.