புதுடில்லி வரி செலுத்துவோருக்கான இலவச ‘மொபைல் போன்’ செயலியை, வருமான வரித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
வருமான வரித் துறை அறிமுகப்படுத்தி உள்ள, ‘ஏ.ஐ.எஸ்., பார் டேக்ஸ்பேயர்’ என்ற மொபைல் போன் செயலி, ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’ மற்றும் ‘ஆப்பிள் ஸ்டோரில்’ இலவசமாக கிடைக்கிறது.
வரி செலுத்துவோர், ‘பான்’ எண்ணை பயன்படுத்தி இந்த செயலிக்குள் நுழைய வேண்டும்.
பிறகு, மின்னணு வருமான வரித் தாக்கலின் போது கொடுக்கப்பட்ட மொபைல் போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.
அதற்கு வரும் ஓ.டி.பி.,யை பயன்படுத்தி இந்த செயலியை பயன்படுத்தலாம்.
இந்த செயலியில், வட்டி, ஈவுத் தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல்கள், ஜி.எஸ்.டி., தரவு, வெளிநாட்டு பணம் அனுப்புதல் போன்றவை தொடர்பான தகவல்களை, வரி செலுத்துவோர் காணலாம்.
மேலும், செயலியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களையும் வழங்கலாம்.
‘இந்த செயலி, வரி செலுத்துவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்’ என, வருமான வரித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்