Jio Postpaid திட்டத்தின் விலை அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா? பயனர்கள் அதிர்ச்சி..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதன் Jio Plus வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் postpaid திட்டத்தின் விலையை 299 ரூபாயாக அதிகாரித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக பயனர்கள் மாதம் 30GB டேட்டா பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தில் அதிவேக டேட்டா தவிர அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100SMS சேவை வசதிகள் கிடைக்கும். மேலும் நமக்கு JioTV, JioCinema, JioSecurity, JioCloud போன்ற கூடுதல் சேவைகள் கிடைகின்றன. இந்த திட்டத்திற்கு நாம் முன்பணமாக 375 ரூபாய் செலுத்தவேண்டும்.

இதற்கு முன்னதாக என்ட்ரி லெவல் postpaid திடமாக 199 ரூபாய் திட்டம் இருந்துவந்தது. இதை செயல்படுத்த 99 ரூபாய் செலுத்தவேண்டும். அதில் வாடிக்கையாளர்களுக்கு Jio Prime சேவை கிடைக்கும்.

Jio 199 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் இப்போது செயல்பாட்டில் இல்லை என்றாலும் இதை நாம் Activate செய்ய 99 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். இதில் 25GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை, ஒரு நாளைக்கு 100SMS சேவை, STD, Roaming, Local என் அனைத்தும் கிடைக்கும். இதிலும் JioTV, JioCinema, JioSecurity, JioCloud போன்ற சேவைகள் கிடைக்கின்றன.

Jio 299 ரூபாய் திட்டம்

இதில் நமக்கு 30GB டேட்டா கிடைக்கிறது. அதாவது 5GB கூடுதல் டேட்டா பெற 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மற்றவகையில் இரு திட்டங்களும் ஒரே அளவு வசதிகள் கொண்டுள்ளன. இதை சத்தமில்லாமல் ஜியோ நிறுவனம் செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.