நடிகர் அஜித்தின் தந்தை மறைந்ததை அடுத்து, நடிகர் விஜய், அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) இன்று அதிகாலை காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அதே போல் நடிகர் பார்த்திபன், மிர்ச்சி சிவா, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அஜித்தின் தந்தை உடல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள மயானத்தில் இன்று காலை 11 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமார் இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சில நிமிட சந்திப்புக்கு பிறகு விஜய் புறப்பட்டுச்சென்றார். விஜய் வருகையால் அஜித் வீட்டு முன்பு ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in