பாதிரியார் பற்றிய புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ. குழித்துறையை தலைமை இடமாகக் கொண்ட கத்தோலிக்க சபையில் இவர் பாதிரியாக இருந்து வந்தார் . கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர் தக்கலை அடுத்த கிலாங்காலை தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த இந்த நிலையில் பாதிரியார் பெனடிக் ஆன்றோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் ஆபாச சாட்டிங்குகள் வலைத்தளங்களில் பரவி வந்தன.

பாதிரியாரின் லேப்டாப் ஒன்றும் போலீசார் வசம் சிக்கியது. அதில் 80க்கும் மேற்பட்ட இளம் பெண்களுடன் இருந்த ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. இந்த பரபரப்பான சூழலில் பாதிரியார் மீது முதலில் ஒரு நர்சிங் பள்ளி மாணவி புகார் அளித்திருந்தார். அதை அடுத்து மேலும் 4 பெண்கள் புகார் அளித்தனர்.5 பெண்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்ய வழக்குப்பதிவு செய்து பாதிரியாரை போலீசார் பிடிக்க முற்பட்டபோது அவர் தலைமறைவானார்.

தீவிர தேடுதல் வேட்டையில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த பாதிரியாரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாதிரியார் குறித்து புகார்கள் பெண்கள் புகார் தெரிவிக்கலாம் . ஆன்லைன் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் , பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் சிறையில் இருந்து வந்த பாதிரியார் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர். போலீசார் ஐந்து பெண்கள் இதுவரைக்கும் பாதிரியார் மீது புகார் கொடுத்திருக்கும் நிலையில் அதில் ஒரு பெண் போலீசார் முன்னிலையில் ஆஜராகவில்லை. பாதிரியார் குறித்து பல முக்கிய ஆவணங்கள் வைத்திருப்பதாக சொன்ன அந்த பெண்ணை ஆஜர் படுத்தவும் அவரிடம் விசாரணை அறிக்கை பெறவும் போலீசார் முயன்று வருகிறார்கள். இந்த நிலையில் பாதிரியார் குறித்து மேலும் ஆதாரங்கள், ஆவணங்கள் யாரிடமாவது இருந்தால் 84389 81930 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.