மருத்துவக் கல்லூரிகள் இருமடங்காக அதிகரிப்பு: மத்திய அரசு| Medical Colleges Doubled Since 2014, AIIMS Increased From 7 To 22: Centre

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 2014க்குப் பிறகு இரு மடங்காக அதிகரித்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி ஆட்சியில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2014 வரை 387 மருத்துவ கல்லூரிகள் இருந்த நிலையில், 2023ம் ஆண்டு நிலவரப்படி அந்த எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது.

latest tamil news

அதேபோல், 2014ல் 7 ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான இடமும், 31,185 ல் இருந்து 65, 335 ஆனது. எம்.பி.பி.எஸ்., இடங்களும் 51,348 ல் இருந்து 1,01, 043 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.