அடேங்கப்பா.. "சென்னையில்" இவ்வளவு இடங்களா..தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

தமிழ்நாடு அரசு மாநில பேரிடர் மேலாண்மைத் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் சுமார் மூன்று ஆயிரத்து 916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றில், 317 இடங்கள் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், 719 இடங்கள் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், 1,086 இடங்கள் மிதமான பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், 1714 இடங்கள் குறைவான பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களின் அடிப்படையில், மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் ஐந்து அடிக்கு மேலும், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மூன்று அடி முதல் ஐந்து அடி வரையிலும், மிதமான பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் இரண்டு அடி முதல் மூன்று அடி வரையிலும், குறைவான பாதிப்புக்குள்ளான இடங்களில் இரண்டு அடிக்கும் குறைவாகவும் வெள்ள நீர் தேங்கிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த பகுதிகளில் அதிக பட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 389 இடங்களும், சென்னை மாவட்டத்தில் 332 இடங்களும், கடலூர் மாவட்டத்தில் 293 இடங்களும், நீலகிரி மாவட்டத்தில் 284 இடங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 228 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.