ராகுலுக்கு அரசு பெரிய மனதை காட்டியிருக்க வேண்டும்

தனது சொந்த மாநிலமான பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர்  கூறுகையில், ‘‘நான் சட்ட வல்லுநர் கிடையாது. ஆனால் சட்டத்தின் செயல்பாட்டுக்கு உரிய மரியாதையுடன் கூறுகிறேன் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகையானது. தேர்தல் நேரத்தின்போது மக்கள் அனைத்து விஷயங்களையும் கூறுகிறார்கள். இது முதல் நிகழ்வு கிடையாது, கடைசியாக இருக்கப்போவதும் இல்லை. அவதூறு வழக்குக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்பது மிகவும் அதிகப்படியானது. மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயின் பிரபல வரியான சிறிய இதயத்துடன் யாரும் பெரியவர்களாக மாட்டார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.  ராகுலின் தகுதி நீக்கம் குறித்து ஆளும் அரசானது தனது பெரிய மனதை காட்ட வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.