4 வயது மூத்த நடிகையுடன் திருமணம்… பிரபல நடிகர் பதிலடி!!

பசங்க கிஷோர் தன்னைவிட 4 வயது மூத்த சீரியல் நடிகையை திருமணம் செய்தது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான பசங்க திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்த கிஷோர், தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில், கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கிஷோரும், ப்ரீத்தி குமாரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். திருமணப் புகைப்படத்தை ப்ரீத்தி குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, இருவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

கிஷோர், ப்ரீத்தியை விட நான்கு வயது இளையவர் என்பதால் பலரும், பெண் அவருக்கு அக்கா போல் இருப்பதாக கமென்ட் செய்தனர். இதே போல் பலரும் வயது வேறுபாடு குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதற்கு நடிகர் பதிலடி கொடுத்துள்ளார். வயது வெறும் நம்பர் தான் என்று கூறியுள்ள அவர், எனக்கு கிடைத்த பெண்போல் உங்களுக்கும் கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேச மாட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது. வீட்டிலும் பிரச்னை இல்லை. இதில் யாருக்கு என்ன பிரச்னை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.