10 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரம்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்சா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா வர்மா என்பவரின் 10 வயது மகன் விவேக் என்பவரை கடந்த 23ஆம் தேதியிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கிருஷ்ணா வர்மா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிராமத்திற்கு அருகே உள்ள வயலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவன் உடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்குச் சென்று பார்த்தபோது சடலமாக கிடந்தது காணாமல்போன சிறுவன் விவேக் என்பது தெரியவந்தது. காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், உறவினரே சிறுவனை கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உறவினரான அனூப் என்பவர் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது 2 வயது மகன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றும் சரியாகவில்லை.

பின்னர் ஒரு மந்திரவாதியைச் சந்தித்த அனூப், நரபலி கொடுத்தால் குழந்தையின் மன நலப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்று அவர் கூறியதை நம்பியுள்ளார். இதையடுத்து அவர் விவேக்கை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

எனவே சிந்தாராம் என்பவருடன் சேர்ந்து விவேக்கை நரபலி கொடுத்து கொலை செய்து உடலைக் கிராமத்தின் அருகே வீசிவிட்டு வந்தது போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அனூப், சிந்தாராம், மந்திரவாதி ஆகிய மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.