ஜெமினி கணேசனின் பேரனுக்கு வந்த சோதனை!!

சென்னை தி.நகர் ஆர்காட் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மஞ்சு (37). இவர், ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்து வருவதால் திரை பிரபலங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து இரு மகள்களுடன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுவிற்கு ‘சென்னை28 பாகம்2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகரும், பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனுமான அபிநய் என்பவரின் மனைவி அபர்ணா அறிமுகமானார். பின்னர் அபர்ணா வாடிக்கையாளர் என்ற முறையில் மஞ்சுவிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மஞ்சுவின் மகள் லாவண்யாஸ்ரீ 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். பின்னர் லாவண்யா விரும்பிய கல்லூரியில் மருத்துவ சீட் கிடைக்காததால் மஞ்சு தனக்கு தெரிந்த நபர்களிடம் கல்லூரி சீட் குறித்து கேட்டுள்ளார். இதை கேள்விப்பட்ட அபர்ணா அபிநய், மஞ்சுவிடம் தனக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தெரிந்த நண்பர் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் லாவண்யாவுக்கு மருத்துவ சீட் வாங்கி விடலாம் என்றும் முதற்கட்டமாக 5 லட்ச ரூபாய் கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும் மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி மஞ்சு கடந்த ஜனவரி மாதம் அபர்ணா கூறியதன் பேரில் அவரது நண்பர் அஜய் வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்று பின்பு அபர்ணா அபிநய், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியது போன்று ஒரு சான்றிதழை மஞ்சு வாட்ஸ்அப்பிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் மஞ்சு அந்த சான்றிதழுடன் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு மகளை சேர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சான்றிதழை ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகம் இது போலி சான்றிதழ் என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் மஞ்சு அபர்ணாவிடம் சென்று இது குறித்து கேட்டதுடன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்த அபர்ணா ஒரு கட்டத்தில், 5 லட்சம் பணத்தை தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு தானே அனுப்பினாய், அவரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இருப்பினும் மஞ்சு தொடர்ந்து பணத்தை கேட்டு்வந்ததால் தான் நடத்தி வந்த ஆடை விற்பனை செய்யும் கடையை மூடிவிட்டு அபர்ணா தலைமறைவானார்.

இதனால் பாதிக்கப்பட்ட மஞ்சு மாம்பலம் காவல் நிலையத்தில் அர்பணா மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அபர்ணா மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் மீது மோசடி, போலியான ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து போலீசார் தலைமறைவான அபர்ணா, அஜய் ஆகியோரை தேடிவருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.