550 குழந்தைகளுக்கு தந்தையான நபருக்கு வந்த சோதனை… பலன் பெற்ற பெண் கோர்ட்டில் வழக்கு

தி ஹேக்,

கென்யா நாட்டை சேர்ந்தவர் ஜோனாதன் ஜேக்கப் மீஜர் (வயது 41). நெதர்லாந்து நாட்டில் தற்போது வசித்து வருகிறார். இசையமைப்பாளர் பணியில் உள்ள அவர், பகுதி நேர வேலையாக விந்தணுக்களை தானம் வழங்கி வருகிறார். இதன்வழியே லாபமும் சம்பாதித்து வருகிறார்.

அதனை பெற்று பெண்கள் பலர் பயனடைந்து உள்ளனர். இதன்படி, அவர் 550 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். இந்த சூழலில், அவரிடம் இருந்து பலன் பெற்ற டச்சு நாட்டு பெண் ஒருவர் ஜேக்கப் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.

ஈவா என்ற அந்த பெண், ஜேக்கப் 100 குழந்தைகளுக்கு மேல் தந்தையாகி விட்டார் என முன்பே அறிந்திருந்தால், அவரை ஒருபோதும் நான் தேர்வு செய்திருக்கவேமாட்டேன்.

இதனால் எனது குழந்தைக்கு ஏற்படும் விளைவுகளை நினைத்து பார்த்தால் எனது வயிற்றுக்கு நான் பாதிப்பு உண்டாக்கி இருக்கிறேன் என கூறியுள்ளார்.

டச்சு நாட்டு சட்டத்தின்படி, 12 பெண்களுக்கு இடையே 25 குழந்தைகளுக்கு கூடுதலாக தந்தையாவதற்கு விந்தணு தானம் செய்பவர் உதவிட கூடாது என தெரிவிக்கின்றது.

ஆனால், இந்த விதிகளை மீறியதற்காக, 25 குடும்பங்கள் சார்பில் அவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஏனெனில், அப்போதுதான், தங்களுக்கு தற்செயலாக நடந்து போன இந்த விசயங்களால், நூற்றுக்கணக்கான சகோதரர், சகோதரிகள் உருவாகி உள்ளனர் என மனரீதியிலான பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படாது என்ற நோக்கில் சட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, வருங்காலத்தில் இதுபோன்ற விந்தணு தானம் செய்யாமல் அவரை தடுக்கும் வகையில் டோனார்கைண்ட் என்ற அறக்கட்டளையும் ஜேக்கப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளது.

இதுபற்றி அதன் தலைவர் டைஸ் வான் டெர் மீர் கூறும்போது, அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. அதனால், நாங்கள் இந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளோம்.

உலகளாவிய அளவில் இணையதளம் வழியே பெரிய அளவிலான மற்றும் சர்வதேச விந்தணு வங்கிகளுடன் இணைந்து இந்த வர்த்தகத்தில் அவர் செயல்பட்டு வருகிறார் என கூறியுள்ளார்.

ஒரு நாட்டில் ஒரே தந்தை என்ற வகையில், குழந்தைகள் அனைவரும் சகோதரர், சகோதரிகள் என ஆகும்போது, அது வருங்காலத்தில் திருமணம் ஆகும்போது மற்றும் வேறு சில விசயங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என கூறப்படுகிறது.

டச்சு தவிர்த்து, உக்ரைன், டென்மார்க் உள்பட பல நாடுகளை சேர்ந்த பெண்கள், பலர் இவரால் பலன் அடைந்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.