திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் போன்ற விசேஷ நாட்களில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுப்பு விடப்பட்டு வருகின்றது.
இதுதவிர அந்தந்த மாவட்ட கோவில் திருவிழா போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், வரும் ஏப்ரல் 4-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.
இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர்,” வரும் ஏப்ரல் நான்காம் தேதி சென்னை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த தடை உத்தரவை மீறி நான்காம் தேதி மதுபானம் விற்கப்படுவது தெரிந்தால் சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.