Shruti Haasan: காதலருடனான அந்தரங்க போட்டோவை ஷேர் செய்த ஸ்ருதி ஹாசன்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது.

ஸ்ருதி ஹாசன்உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன். 2009 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான லக் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார்.
​ Viduthalai Review: இந்திய சினிமா கண்டிராத ஒன்று… விமர்சகர்களின் பாராட்டு மழையில் விடுதலை!​
தமிழ் படங்கள்இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கிய ஸ்ருதி ஹாசன் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழில் தனுஷுன் 3 , விஷாலின் பூஜை, விஜய்யின் புலி, அஜித்தின் வேதாளம், சூர்யாவின் சிங்கம் 3 , விஜய் சேதுபதியின் லாபம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
​ Ponniyin Selvan 2: ‘பொன்னியின் செல்வன் 2’ பேரழகி குந்தவையாக த்ரிஷா.. அசத்தல் க்ளிக்ஸ்!​
லிவிங் டுகெதர்
தற்போது சலார், தி ஐ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பையில் வசித்து வருகிறார். சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து வரும் ஸ்ருதி ஹாசன், மும்பையில் அவருடன் லிவிங் டுகெதரில் உள்ளார். அவ்வப்போது தனது காதலருடனான ரொமான்டிக் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
அந்தரங்க போட்டோஅந்த வகையில் தற்போது காதலருடன் படுக்கையறையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ருதி ஹாசன், யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட் என்றும் தனது காதலரை குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் காதலருடன் இருக்கும் அந்தரங்க போட்டோவை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
​ Aishwarya Rajinikanth: மொத்தம் 200 பவுன் நகைய காணோம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்!​
தைரியம் வேண்டும்மேலும் இதுபோன்ற பர்சனல் போட்டோக்களை வெளியிட தனி தைரியம் வேண்டும், அது ஸ்ருதி ஹாசனிடம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். துணிச்சலான பெண்ணாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது யார் என்ன விமர்சித்தாலும் அதற்கு ரியாக்ட் செய்யாமல் உள்ளார். தனது வேலையில் கவனம் செலுத்துவதிலும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.
​ தொடரும் துரோகங்கள்.. அசராத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!​
Shruti Haasan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.