#திருவாரூர் | உர மூட்டை வேண்டுமா? நீங்கள் எந்த சாதி? விவசாயியை பார்த்து கேள்வி கேக்கும் அவலம்!

திருவாரூரில் ஆதார் எண் கொடுத்து விவசாயிகள் உரம் வாங்கும் போது, சாதி விபரங்களை கொடுத்தால் தான் உரம் கிடைக்கும் என்ற புகார் புகார் எழுந்துள்ளது. (இதுகுறித்து பிரபல செய்தி ஊடகம் ஒன்று விடுத்துள்ள செய்தியின் அடிப்படையில் கீழ்க்கண்ட செய்தி தொகுத்து வழங்கப்படுகிறது) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில உரக் கடைகளில், விவசாயிகள் ஆதார் எண் கொடுத்து உரம் பெற்று வந்தனர். மத்திய அரசு கொடுக்கக்கூடிய மானியம் விவசாய விவசாயிகளுக்கு சென்றடைவதற்காக இந்த ஆதார் எண் கொடுக்கும் நடைமுறை … Read more

விஜயகாந்த்துக்கு எதிரான அவதூறு வழக்கை திரும்ப பெற அனுமதியளித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, கடந்த 2016-ம் ஆண்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னை எம்.பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், அரசியல் … Read more

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கிக்கொண்டே இருந்தால்…: ஜேர்மன் ஆயுத உற்பத்தியாளரின் எச்சரிக்கை

ஜேர்மனியின் பாதுகாப்புக்கென இருக்கும் ஆயுதங்களை ஜேர்மனி உக்ரைனுக்கு வழங்கிக்கொண்டே இருந்தால், ஜேர்மனியின் பாதுகாப்புக்கே குந்தகம் ஏற்படும் என ஜேர்மன் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஜேர்மனி ரஷ்யா உக்ரைன் போரில் முதலில் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யத் தயங்கிய ஜேர்மனி, இப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளது. போர் வாகனங்கள், குண்டுகள் முதலான பல விடயங்களை உக்ரைனுக்கு வழங்க ஒப்புக்கொண்ட ஜேர்மனி, தற்போது Skynex மற்றும் Skyranger என்னும் வான் பாதுகாப்பு ஆயுதங்களை … Read more

புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்?: அதிகாரிகளுடன் பாஜ அமைச்சர், எம்எல்ஏ மோதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெறுவதாக அதிகாரிகளுடன் பாஜ அமைச்சர் மற்றும் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரியில் அரசின் மானியம், நலத்திட்டம் பெற விரும்பாத வசதி படைத்தவர்கள் தங்களது ரேஷன் கார்டை ஒப்படைத்து கவுரவ கார்டுகளாக மாற்றும் நிகழ்ச்சி குடிமைப்பொருள் வழங்கல் துறையின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாஜ அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது குடும்ப அட்டைகளை சரண்டர் செய்தனர். அப்போது கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, ரேஷன் … Read more

நடிகையிடம் அத்துமீறல் பிரியங்காவின் உதவியாளர் மீது வழக்கு

மீரட்: நடிகை அர்ச்சனா கவுதமிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் தனி உதவியாளர் சந்தீப் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அழகி பட்டத்தை வென்றவர் அர்ச்சனா கவுதம். இவர், கடந்த 2022ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஹஸ்தினாபூர் தனிதொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா, அர்ச்சனாவை சந்திக்க விரும்புவதாகவும், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கும் … Read more

ரசிகர்களை அழ வைப்பது எளிது, சிரிக்க வைப்பது கடினம்: காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தற்போது தமிழில் இந்தியன் 2, கருங்காப்பியம் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள படம் கோஸ்டி. இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். இந்த படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்துள்ள காஜல் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: நான் நடித்திருக்கும் பேய் காமெடி படம் இது. ஏற்கெனவே நிறைய காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். பேய் படத்திலும் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் நான் இரண்டு வேடங்களில் … Read more

ரோஹிங்கியா முஸ்லிம் பிரச்னை மியான்மர் மீது குற்றச்சாட்டு| Rohingya Muslim problem blamed on Myanmar

டாக்கா, ”ரோஹிங்கியா முஸ்லிம்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள மியான்மர் அரசு தயாராக இல்லை,” என, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2017ல் உள்நாட்டு போர் நடந்தது. அங்கிருந்து வெளியேறிய 11 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு மீண்டும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் மேலும் கூறியுள்ளதாவது: … Read more