பிரதமர் நரேந்திர மோடியுடன் உதயநிதி சந்திப்பு – நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது குறித்து கோரிக்கை விடுத்தார்

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார். தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். இரவு, திருமண விழாவில் பங்கேற்பதற்கு முன், டெல்லியில் பணியாற்றும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை நேற்று … Read more

மகாராஷ்டிராவில் வெங்காய விலை வீழ்ச்சி – எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளி

மும்பை: மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் மொத்த விலை கிலோ ரூ.4-லிருந்து நேற்று முன்தினம் ரூ.2 ஆக குறைந்தது. இதனால் கோபமடைந்த அடைந்த விவசாயிகள் நாசிக் மண்டியில் வெங்காய ஏலத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 மானியமாக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், வெங்காயத்தை கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வெங்காய விவசாயிகள் சங்க தலைவர் பாரத் டிகோல் வேண்டுகோள் விடுத்தார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் … Read more

PIL For Live-In: தனிமனித சுதந்திரத்தைக் காக்க லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு அனுமதி தேவை

நியூடெல்லி: லிவ்-இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற பெரிய குற்றங்கள் உட்பட, லிவ்-இன் பார்ட்னர்களால் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மம்தா ராணி vs மத்திய அரசு என்ற வழக்கில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள், அதை சட்டப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா … Read more

மும்பை பங்குச் சந்தையில் சரிவில் இருந்து மீண்ட அதானி குழுமத்தின் 8 நிறுவனப் பங்குகள்

அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் போது மீட்சியைக் கண்டுள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் நேற்று காலை 7சதவீதத்திற்கும்மேல் சரிவடைந்த நிலையில், மாலையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் உயர்ந்தது. அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி வில்மர், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி ஆகியவற்றின் பங்குகளின் விலையிலும் உயர்வு காணப்பட்டது. இம்மாத இறுதிக்குள் 690 மில்லியன் முதல் 790 மில்லியன் டாலர் வரையிலான கடன்களை முன்கூட்டியே செலுத்தவோ … Read more

ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை…திருமணமான 2வது நாளில் நேர்ந்த சோகம் திருமணம்

 திருமணம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பிறகு, விருந்தில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஆட்டு இறைச்சி விருந்து தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கு கடந்த 23ம் திகதி செல்வி என்ற பெண்ணுடம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 24ம் திகதி பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளார், அங்கு பரிமாறப்பட்ட ஆட்டு இறைச்சி விருந்தை சாப்பிட்டு விட்டு, கணவன், மனைவி இருவரும் கண்ணவேலம்பாளையம் திரும்பி விட்டனர். Getty … Read more

உலகளவில் 67.99 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.70 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.27 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் மாஜி அமைச்சர் பகுதிக்கு தடை

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த என் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், ஆணையம் குறிப்பிட்டுள்ள விபரங்கள் தவறானவை. ஆணையம் என்னை சாட்சியாக மட்டுமே அழைத்தது. ஆனால், இறுதி அறிக்கையில் என் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு முரணானது. எனவே, ஆணைய அறிக்கை அடிப்படையில் மேல் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,799,892 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,927,382 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,779,872 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,535 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிஐபி இயக்குனராக ராஜேஷ் மல்கோத்ரா நியமனம்

புதுடெல்லி: பிஐபியின் புதிய முதன்மை இயக்குனராக மூத்த இந்திய தகவல் சேவை அதிகாரி ராஜேஷ் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி தொடர்பு அலுவலகத்தின் இயக்குனராக இருந்த சத்யேந்திர பிரகாஷ் நேற்று ஒன்றிய அரசின் முதன்மை செய்தி தொடர்பாளராக மாற்றப்பட்டார். இதையடுத்து பிஐபியின் புதிய முதன்மை இயக்குனராக ராஜேஷ் மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். இதே போல் தூர்தர்ஷன் செய்திகள் இயக்குனர் ஜெனரலாக இருந்த மயங்க் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பிரியா குமார் புதிய இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.