பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..!!

கோழிக்கோடு நகர் பகுதியில் ஜெயலட்சிமி என்ற துணிக்கடை 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இன்று காலை இந்த கடையின் இரண்டாவது தலத்தில் திடிரென்று தீப்பற்றி கரும் புகை வெளியேறியது.

நெருப்பு மளமளவென்று பிற பகுதிகளுக்கும் பரவியதில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் எரிந்து சேதமடைந்தன. அதற்குள் தகவலறிந்த மாவட்டங்களில் இருந்து 20 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து நெருப்பை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கடையின் பல்வேறு பகுதிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்த பகுதியே புகை மணடலமாக காட்சியளிக்கிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.