கட்டண உயர்வை திரும்ப பெற கோரிக்கை..!!

தமிழகத்தில் மட்டும் 49 சுங்க சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முதல் சுங்க சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி கார், ஜுப், வேன் உள்பட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.95 என்பது ரூ.5 உயர்ந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மினி பஸ் உள்பட வானங்களுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.165 ஆகவும், பஸ் டிரக் உள்பட வாகனங்களுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.345 ஆகவும், எச்.சி.எம். வாகனங்களுக்கு ரூ.30 அதிகாரித்து ரூ.540 ஆகவும், ஓவர் சைஸ் வாகனங்களுக்கு ரூ.625-ல் இருந்த ரூ.30 உயர்ந்து ரூ.655 ஆகவும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள 460 சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்ல் அமுலுகு வந்துள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு, சென்னை வானகரம், திண்டிவனம், சேலம் ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னை சமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர்டி, கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர, நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீ பெரும்புதூர், பள்ளிகொண்டா, பரனூர், பட்டறை பெரும்புதூர், புதுக்கோட்டை வாகைகுளம், எஸ்.வி.புரம். சாலை புதூர், செண்பகம்பேட்டை, திருப்பாச்சேத்தி, வாணயம்படி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் சுங்கச்சவாடிகள் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை இந்த சுங்கசாவடிகள் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்லில் கீரம்பூர்டி சுங்க சாவடியில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமான லாரி உரிமையாளர்கள், மணல் லாரி, டேங்கர் லாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுங்க கட்டண உயர்வால் தொழில் மேலும் நலிவடையும் உள்ளது. இதனால் காலாவதியான சுங்கசாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் விரைவில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.