சென்னை: விடுதலை 1 படத்தின் காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் விடுதலை 1 படம் தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு தொடர்ந்து பலரும் பாசிட்டிவ் ரிவ்யூக்களை வழங்கி வருகின்றனர்.
படத்தில் சூரி நடிப்பு, பாப்பாவாக வரும் பவானி ஸ்ரீ என்று எல்லோரின் நடிப்பும் படத்தில் அசத்தலாக இருப்பதாக மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சூரி
படத்தில் விஜய் சேதுபதி சில நிமிடங்களே வருகிறார். சில நிமிடங்கள் வந்தாலும் கூட அவரின் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். படத்தில் வரும் நெஞ்சை பிளிற வைக்கும் விசாரணை காட்சிகள் பெரிய அளவில் மக்கள் மனதை பாதித்து உள்ளன. முக்கியமாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், அவர்கள் போலீஸ் விசாரணையில் சந்திக்கும் சித்திரவதைகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. அதேபோல் வர்க்க ஏற்றத்தாழ்வால் ஏற்படும் மோதல், மைனிங் நிறுவனத்தின் வருகை, சவ் சவ் சாப்பிட்டு உணவிற்கு கஷ்டப்படும் போலீசார் தொடர்பான காட்சிகளும் விமர்சனங்களை சந்தித்துள்ளன.

வெற்றி
இந்த படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய் ஆகும். முதலில் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு எடுக்க திட்டமிடப்பட்டு தற்போது பட்ஜெட் புதிய உயரத்தை தொட்டுள்ளது. இதையடுத்து படத்தின் பட்ஜெட்டை சமாளிக்க இரண்டு பாகமாக படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் 80 கோடிக்கு மேல் இந்த படம் முதல் பாகத்தில் மட்டும் வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஹிட் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

இரண்டாம் பாகம்
இதன் ஷூட்டிங் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில் விடுதலை 1 படத்தின் காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த படம் பார்க்கத்தவர்களுக்கு அது ஸ்பாய்லர் போல இருக்கும் என்பதால் மேற்கொண்டு படிக்க வேண்டாம். இந்த படத்தில் வாத்தியார் என்று விஜய் சேதுபதியை சூரி தேடுவது போல காட்சிகள் இருக்கும். இந்த நிலையில் படத்திற்கு இடையில் சூரி.. தமிழ் செல்வி கதாபாத்திரத்தை காண செல்வார். இவர்கள் ஒன்றாக தியேட்டர் ஒன்றில் சந்திப்பார்கள்.

தியேட்டர்
தியேட்டரில் தமிழ் செல்விக்கு சூரி உணவு வாங்கி கொடுப்பது போல காட்சிகள் இருக்கும். இந்த காட்சிகள் வரும் சீனில் விஜய் சேதுபதி சூரிக்கு பின்னால் அமர்ந்து இருப்பது போல காட்சிகள் இருக்கும். சூரி உள்ளிட்ட போலீசார் விஜய் சேதுபதியை தேடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அவரின் முகம் யாருக்கும் தெரியாது. வாத்தியாரின் தோற்றம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவரை யாராலும் அடையாளம் காண முடியாது. இந்த நிலையில் விஜய் சேதுபதியும் தைரியமாக இங்கும் அங்கும் சென்று இருப்பார். தைரியமாக நடமாடிக்கொண்டு இருப்பார். அந்த வகையில்தான் அவர் தியேட்டருக்கு வந்து இருப்பார். அவர் இப்படி தியேட்டருக்கு வந்த காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.