கர்நாடக சட்டமன்றத் தேர்தல் 2023: வாட்ஸ்-அப் குரூப், லீகல் டீம், சோஷியல் மீடியா டீலிங்… கட்சிகள் பலே வியூகம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வாக்குப்பதிவு மே 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதியும் நடத்தப்படுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி கட்டிலில் அமரும். இங்கு போட்டி என்பது பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாகவே அமைந்துள்ளது.

மும்முனை போட்டி

அதிலும் ஓல்டு மைசூரு மண்டலத்தை ஒதுக்கி வைத்தால் பாஜக, காங்கிரஸ் என இருமுனைப் போட்டியாக களம் அமையும். தற்போது சோஷியல் மீடியா யுகம் என்பதால் அதன்மூலம் வாக்காளர்களை கவரும் யுக்தியை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒவ்வொரு பூத் வாரியாக சோஷியல் மீடியா படையை மிகவும் ஆக்டிவ் ஆக வைத்திருக்கிறது.

பாஜகவின் வியூகம்

ஒவ்வொரு வாக்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்து காய்களை நகர்த்தி வருகிறது. இதேபோல் பாஜக அடிமட்ட அளவில் இருந்து வேலை செய்ய சோஷியல் மீடியா போராளிகளை இறக்கி விட்டுள்ளது. வரும் 8ஆம் தேதி சோஷியல் மீடியா நிர்வாகிகளை முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும், சமூக வலைதளங்கள் மூலம் வாக்காளர்களை கவருவது உள்ளிட்ட விஷயங்கள் அறிவுறுத்தப்படும் எனச் சொல்லப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம்

இதுதொடர்பாக பாஜக சோஷியல் மீடியா பிரிவு ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார் கூறுகையில், மாவட்ட வாரியாக முதல் ரவுண்ட் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்து விட்டோம். தேர்தல் நெருங்கி வருவதால் நிர்வாகிகள் மத்தியில் சுணக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதில் ஒரு தகவலை எப்படி பகிர்வது,

காங்கிரஸ் திட்டம்

எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது, சரியான தகவல்களை கண்டறிவது, புள்ளி விவரங்களோடு தகவல்களை தெரிவிப்பது போன்ற விஷயங்கள் குறித்து விளக்கப்படும் எனக் கூறினார். காங்கிரஸ் சோஷியல் மீடியா பிரிவு தலைவர் பூர்னேஷ் பந்தாரி கூறுகையில், நாங்கள் இரண்டு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்.

வாட்ஸ்-குரூப்கள்

தகவல்களை உருவாக்குவது மற்றும் பகிர்வது. தேசிய இருந்து மாநில தலைமையிடம் இருந்து வரும் தகவல்களை சரியான முறையில் பகிர்ந்து மக்களிடம் கொண்டு செல்வோம். ஒவ்வொரு பூத்திற்கும் வாட்ஸ்-அப் குரூப்கள் உருவாக்கி வைத்துள்ளோம். சட்ட ரீதியான பிரச்சினைகள் வந்தால் அதை எதிர்கொள்ள வழக்கறிஞர்கள் அடங்கிய குழு ஒன்றை தயார்படுத்தி இருக்கிறோம்.

இவர்கள் கட்சியினருக்கு உரிய முறையில் வழிகாட்டுவர். பிரச்சாரத்தின் போது ஏதாவது சிக்கல்கள் வந்தால் அவற்றை சமாளிக்க உறுதுணையாக விளங்குவர். தேர்தல் ஆணையம் என்னென்ன வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறதோ, அவற்றை எல்லாம் சரியான முறையில் பின்பற்றி நடப்போம் எனத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.