A.R. Murugadoss on Kamal – கமலுடன் படம் செய்யாததற்கு என்ன காரணம்?.. உண்மையை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்

சென்னை: A.R. Murugadoss on Kamal (கமல் ஹாசன் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ்) இத்தனை வருடங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து படம் செய்யாததற்கு காரணம் என்ன என்பது குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த தீனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படமே மெகா ஹிட்டானதால் கோலிவுட்டில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார் அவர்.

தொடர் வெற்றிகள் கொடுத்த முருகதாஸ்

முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகின. இதில் கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கும் அடக்கம். அப்படத்தின் ஹிந்தி ரீமேக் பெற்ற வெற்றியால் தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஜொலிக்க ஆரம்பித்தார் முருகதாஸ். இதனால் தமிழில் இருந்து பாலிவுட் சென்று வென்ற மிக சில இயக்குநர்களில் முருகதாஸும் ஒருவர் என்ற பெயரையும் அவர் பெற்றார்.

தொடர் சறுக்கலில் முருகதாஸ்

தொடர் சறுக்கலில் முருகதாஸ்

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த முருகதாஸ் சர்கார் படத்திலிருந்து சறுக்க ஆரம்பித்தார். துப்பாக்கி, கத்தி என இரண்டு மெகா ஹிட்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அதன் பிறகு மகேஷ் பாபுவை வைத்து இயக்கிய ஸ்பைடர் படமும் தோல்வியடைய ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கினார். அந்தப் படமும் எதிர்பார்ப்புகளை மட்டும் சம்பாதித்து தோல்வியை சந்தித்தது.

தர்பார் படம் ஏன் தோல்வியடைந்தது

தர்பார் படம் ஏன் தோல்வியடைந்தது

ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர் முருகதாஸ். அப்படி இருக்கும்பட்சத்தில் ரஜினியை வைத்து கேரியர் பெஸ்ட்டை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களை படம் பயங்கரமாக ஏமாற்றியது. அதற்கு என்ன காரணம் என சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், ‘வேகமாக படத்தை எடுத்து முடிக்க வேண்டியிருந்ததால் சரியான திட்டமிடலுடன் படத்தை இயக்கவில்லை’ என மனம் திறந்து பேசியிருந்தார்.

கமல் ஹாசனுடன் ஏன் இணையவில்லை

கமல் ஹாசனுடன் ஏன் இணையவில்லை

முருகதாஸைப் பொறுத்தவரை தனது முதல் படமான தீனா படத்திலிருந்து கடைசியாக எடுத்த தர்பார் வரை முன்னணி ஹீரோக்களை வைத்தே படம் இயக்கியவர். அப்படி இருக்கும்பட்சத்தில் கமல் ஹாசனுடன் ஏன் அவர் இணையவே இல்லை என்ற கேள்வி ரசிகர்களிடம் நெடுங்காலமாகவே இருந்தது. இதுகுறித்தும் பேட்டியில் பேசிய அவர், ” கமல் என்றாலே பொதுவாக எனக்கு சிறிய பயம் இருக்கும். ஆனால் அனைத்து இயக்குநர்களுக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

கமலுக்கு சாதாரண படத்தை எடுத்திட முடியாது

கமலுக்கு சாதாரண படத்தை எடுத்திட முடியாது

கமல் ஹாசனை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களுக்கு அந்தப் படம்தான் அவர்களது கேரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். திரைத்துறையில் இருபது இயக்குநர்களை எடுத்துக்கொண்டால் அவர்களது மிகச்சிறந்த படங்களில் ஒன்று கமலுடன் இணைந்ததாக இருக்கும். எனவே நான் சாதாரணமாக கமலை வைத்து ஒரு படத்தை எடுத்துவிடக்கூடாது என்ற பயத்தில்தான் இதுவரை அவருடன் படம் செய்யவில்லை” என்றார்.

தயாரிப்பாளர் ப்ளஸ் இயக்குநர்

தயாரிப்பாளர் ப்ளஸ் இயக்குநர்

முருகதாஸ் தற்போது கௌதம் கார்த்திக்கை வைத்து ஆகஸ்ட் 14 – 1947 படத்தை தயாரித்திருக்கிறார். அந்தப் படத்தை அவரின் இணை இயக்குநரான பொன்குமார் இயக்கியிருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவும் கமிட்டாகியிருக்கிறார் முருகதாஸ். அந்தப் படத்திற்கான் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஜரூராக நடந்துவர அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.