வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆதார் தரவுகளை பயன்படுத்தும் திட்டம் இல்லை’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து லோக்சபாவில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ஆதார் தரவுகளை பயன்படுத்தும் திட்டம் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனர் தெரிவித்துள்ளனர்.
![]() |
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்படி கடந்த பிப்., மாதம் வரை 136 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்த பின், உயிருடன் இருப்பவர்களில் 130.6 கோடி பேரிடம் ஆதார் எண் உள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement