3ம் உலகப்போர் எப்போ.? – கைதுக்கு பின் தேதி குறித்த டொனால்ட் டிரம்ப்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ஜோ பிடனின் நிர்வாகம் மூன்றாம் உலகப் போருக்கு அழைத்து செல்வதாக டொனால் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

டிரம்ப் சர்ச்சை

ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நீதிமன்றத்தின் பிடிகள் இறுகியுள்ளன. அவர் கைது செய்யப்பட்டாலும் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் கிரிமினல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரையும் டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.

என்ன வழக்கு.?

ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை கடந்த 2006ம் ஆண்டு டெனால்ட் டிரம்ப் சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். டொனால்ட் டிரம்ப் உடனான உறவு குறித்து நடிகை தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதினார். கடந்த 2016 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) போட்டியிட்ட போது, ஆபாச நடிகையுடனான விவகாரம் பேசு பொருளானது. அதைத் தொடர்ந்து மேலும் பேசாமல் இருக்க நடிகைக்கு இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி வரை பணம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தான் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர்

இந்தநிலையில் கைதுக்கு பின் முதன்முறையாக டிரம்ப் இன்று பொதுமக்கள் மத்தியில் உரையாடினார். ஃபுளோரிடாவில் அவர் கூறும்போது, “பிடென் நிர்வாகம் ஒரு முழுமையான அணுஆயுத மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்து வருகிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், நாம் அதிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி ஜோ பிடனின் கீழ் அமெரிக்கா இப்போது குழப்பத்தில் உள்ளது. நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் இல்லை. சீனாவுடன் ரஷ்யா இணைந்துள்ளது. உங்களால் நம்ப முடிகிறதா? சவுதி அரேபியா ஈரானுடன் இணைந்துள்ளது.

நான் மட்டும் இருந்திருந்தால்.?

சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இணைந்து “அச்சுறுத்தும் மற்றும் அழிவுகரமான கூட்டணியாக” உருவாகிவிட்டது. எனது தலைமையின் கீழ் இத்தகைய நிகழ்வுகள் ஒருபோதும் நடந்திருக்க முடியாது. நான் உங்கள் அதிபராக இருந்திருந்தால் அது ஒருபோதும் நடந்திருக்காது. ரஷ்யாவும் உக்ரைனைத் தாக்காது. அந்த உயிர்கள் அனைத்தும் காப்பாற்றப்படும். அந்த அழகான நகரங்கள் அனைத்தும் நீடித்து நிற்கும்.

பாலியல் நடிகையுடன் ஜல்சா.. சரண்டராகும் டொனால்ட் டிரம்ப்.. ஆப்பு வைத்த நீதிபதி.!

நமது நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது, விரைவில் உலகத் தரமாக இருக்காது. இது 200 ஆண்டுகளில் வெளிப்படையாக நமது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். அது போன்ற எந்த தோல்வியும் நம்மை ஒரு பெரிய சக்தியாக இருந்து எடுத்துச் செல்லாது. அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான ஐந்து ஜனாதிபதிகளை நீங்கள் எடுத்து கொண்டால், ஜோ பிடன் நிர்வாகம் செய்தது போல் அவர்கள் நம் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள்” என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.