Poorna: நயன்தாராவ விடுங்க பூர்ணா குழந்தையோட பேர பாருங்க…

மலையாள நடிகையான பூர்ணா தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் பூர்ணா.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Nayanthara: குல தெய்வ கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி… காரணம் இதானா?

நடிகை பூர்ணா, துபாயை சேர்ந்த ஜேபிஎஸ் குழும நிறுவனர் மற்றும் சிஇஓ ஷானித் ஆசிப் அலியை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். துபாயில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினரும் உறவினர்களும் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு சமீபத்தில் வளைக்காப்பு நடைபெற்றது அந்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு துபாயில் உள்ள ஆஸ்டர் மருத்துவமனையில் நேற்று ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து எடுத்த போட்டோக்களை பகிர்ந்த நடிகை பூர்ணா, தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

Vijayakanth: விஜயகாந்த் நிலைகுலைந்து போக காரணம் இதுதான்… பகீர் கிளப்பிய பிரபல இயக்குநர்!

இந்நிலையில் நடிகை பூர்ணா குழந்தையின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி குழந்தைக்கு பெயர் ஹம்தான் என சூட்டியுள்ளனர். ஹம்தான் என்பது துபாய் பட்டத்து இளவரசின் பெயர் என்பது தெரியவந்துள்ளது. பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் என்பவரது பெயரைதான் நடிகை பூர்ணா தனது மகனுக்கு சூட்டியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் நடிகை பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

த்ரிஷா போல சிம்ரனுக்கும் இந்த பெருமை உண்டு!

நடிகை பூர்ணா இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். ஷம்னா கஸிம் என்ற தனது பெயரை சினிமாவுக்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார். ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் நடிகை பூர்ணா. நடிகை பூர்ணா நடிப்பில் சமீபத்தில் தசரா படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நானி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். தமிழில் கடைசியாக பூர்ணா நடிப்பில் விசித்திரன் படம் தமிழில் வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.