Samantha: தான் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் ரஷ்மிகாவை வாழ்த்திய சமந்தா: ரொம்ப பெரிய மனசுமா

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும் அல்லாமல் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. அப்படித் தான் ஹீரோயினை மையமாக கொண்ட ரெயின்போ படத்தில் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவை தேடி வந்தது.

அவர் கை நிறைய படங்கள், சிடாடல் வெப்தொடர் இருப்பதால் ரெயின்போ படத்திற்கு போதிய டேட்ஸ் கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். சமந்தா முடியாது என்று கூறிய பிறகு ரஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ரெயின்போ படத்தின் பூஜை திங்கட்கிழமை நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து கொண்டார் ரஷ்மிகா. அதை பார்த்த சமந்தாவோ வாழ்த்து தெரிவித்து ஸ்மைல் எமோஜியை தட்டிவிட்டார்.

சமந்தாவின் கமெண்ட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

சம்முவுக்கு தான் எவ்வளவு பெரிய மனசு. தான் நடிக்க வேண்டிய படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என தெரிந்தும் வாழ்த்தியிருக்கிறார். இந்த நல்ல மனசுக்கு தான் அவரின் கெரியர் எப்பொழுதுமே உச்சத்தில் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

சாந்தரூபன் இயக்கும் ரெயின்போ படத்தில் ரஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். ரஷ்மிகா வெளியிட்ட புகைப்படங்களில் தேவ் மோகனை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, யாருப்பா இவர். சாகுந்தலம் படத்தில் சமந்தா, ரெயின்போவில் ரஷ்மிகா என டாப் ஹீரோயின்களுடன் சேர்ந்து நடிக்கிறாரே என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leo: பட்டது போதும், இனிமே வேணாம்டா தம்பி: லோகேஷ் கனகராஜிடம் கறாராக சொன்ன விஜய்

ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில், சாந்தரூபன் இயக்கத்தில் ரெயின்போ படத்தில் சமந்தா நடிப்பார் என்று கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அந்த படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டார்.

ரெயின்போ படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 17ம் தேதி துவங்குகிறது. ரொமான்டிக் ஃபேன்டஸி டிராமாவாக உருவாகும் ரெயின்போவுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். குணசேகர் இயக்கியிருக்கும் அந்த படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சாகுந்தலம் படம் தெலுங்கு தவிர்த்து தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது.

இதையடுத்து சாகுந்தலம் படத்தை விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா. இது தவிர்த்து விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி படத்தில் நடிக்கிறார். சாகுந்தலம் வேலையில் சமந்தா பிசியாக இருப்பதால் விஜய் தேவரகொண்டாவின் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

Samantha: நாக சைதன்யா, சோபிதா காதல் பற்றி நான் அப்படி சொல்லவே இல்ல: சமந்தா

குஷி தவிர்த்து சிடாடல் வெப்தொடரிலும் நடித்து வருகிறார் சமந்தா. சிடாடல் ஹாலிவுட் தொடரின் இந்திய வெர்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த தொடரில் சமந்தாவுடன் பாலிவுட் நடிகர் வருண் தவானும் நடிக்கிறார். இருவரும் உளவாளிகளாக நடிக்கிறார்கள். அதனால் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருக்கிறது.

அப்படி ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது சமந்தாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.