Tamannaah:தமன்னாவுக்கு தக்காளினு செல்லப் பெயர் வைத்த நடிகர் விஜய் வர்மா: காதல் கன்ஃபார்மா?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Tamannaah nick name: நடிகர் விஜய் வர்மா தமன்னாவுக்கு தக்காளி என செல்லப் பெயர் வைத்திருக்கிறார். சரியான பெயர் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

​காதல்​தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. ஆனால் அவர்கள் இதுவரை காதலை உறுதி செய்யவில்லை. புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு சென்ற இடத்தில் விஜய் வர்மாவும், தமன்னாவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அதன் பிறகே அவர்கள் காதலிப்பதாக ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
​தக்காளி​AR Murugadoss: சூப்பர் ஸ்டார் அப்பவே சொன்னார் நான் கேட்கல: ஏ.ஆர். முருகதாஸ்விஜய் வர்மா நடித்திருக்கும் தஹாத் சீரீஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அது தொடர்பாக மொத்த குழுவுக்கும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார் தமன்னா. அந்த போஸ்ட்டை ஷேர் செய்து நன்றி டமாட்டர்(தக்காளி) என தெரிவித்துள்ளார் விஜய். ஓ தமன்னாவுக்கு செல்லப் பெயர் தக்காளியா, பொருத்தமான பெயர் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

​விஜய் வர்மா​தமன்னாவை காதலிக்கிறேன் என விஜய் வர்மா இதுவரை தெரிவித்தது இல்லை. இந்நிலையில் தமன்னாவை தக்காளி என்று அவர் அழைத்ததை வைத்து ரசிகர் ஒருவர் விஜய் வர்மாவிடம் உங்களுக்கு தக்காளியை பிடிக்குமா என்று கேட்டார். அதற்கு விஜய் வர்மாவோ, எனக்கு மிகவும் பிடிக்கும் என தக்காளி புகைப்படத்தை வெளியிட்டு பதில் அளித்துள்ளார். இது தக்காளியையா இல்லை தமன்னாவையா என்று ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

​பிரச்சனை?​Samantha: தான் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் ரஷ்மிகாவை வாழ்த்திய சமந்தா: ரொம்ப பெரிய மனசுமாவிஜய் வர்மாவும், தமன்னாவும் ஜோடியாக உணவு சாப்பிட ஹோட்டலுக்கு சென்றார்கள். இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இதையடுத்து காதல் குறித்து தமன்னாவிடம் கேட்டதற்கு பிடிகொடுக்காமல் பேசிவிட்டு சென்றார். இதனால் விஜய் வர்மாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள் போன்று என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தமன்னாவுக்கு நன்றி தெரிவித்து செல்லப் பெயரை வெளியிட்டுள்ளார் விஜய் வர்மா.

​ரசிகர்கள்​தமன்னாவுக்கும், விஜய் வர்மாவுக்கும் இந்த ஆண்டே திருமணம் நடக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். கடவுளே இந்த காதல் கண்டிப்பாக திருமணத்தில் தான் முடிய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் கிசுகிசுவில் சிக்காமல் இருந்து வந்தார் தமன்னா. இந்நிலையில் தான் விஜய் வர்மாவுடன் கிசுகிசுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
​கெரியர்​தமன்னாவின் கெரியர் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் தமன்னா. மேலும் சுந்தர் சி.யின் அரண்மனை 4 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தவிர்த்து இரண்டு இந்தி படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.