Thalaivar 171: கமல் தயாரிப்பில் ரஜினி… விக்ரம் வரிசையில் அடுத்த சம்பவம்… லோகேஷ் ஸ்கெட்ச்!

Rajini Lokesh Kanagaraj Movie: தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க இயலா இயக்குநராக லோகேஷ் கனகராஜ் வளர்ந்துவிட்டார். மாநகரம் படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் கவர்ந்த அவர், கைதி திரைப்படத்தில் அவரின் திரைமொழியால் அனைவரையும் ரசிக சிறையில் அடைத்தார். தொடர்ந்து, அடுத்த படமே விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை எடுத்து, இளைஞர்கள் மத்தியிலும் மாஸாக உயர்ந்தார். 

இவை அனைத்திற்கும் உச்சகட்டமாக, கமல்ஹாசனை வைத்து கடந்தாண்டு வெளியிட்ட விக்ரம் படத்தின் மூலம், சின்ன குழந்தை முதல் வயதான முதியவர் வரை தனது ரசிக பரப்பை விரிவுப்படுத்தினார் என்றுதான் கூறவேண்டும். குடும்பம் குடும்பமாக விக்ரம் படத்தை மட்டுமின்றி, லோகேஷ் கனகராஜையும் ரசிகர்கள் கொண்டாடினர். 

முக்கியமாக, கைதி, விக்ரம் ஆகிய படங்கள் ஒரே கதையுலகில் நடப்பதாக வைத்து, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என ஒரு கதையாடலையும் உருவாக்கினார். தொடர்ந்து, தற்போது அவர் விஜய்யுடன் மீண்டும் இணைந்து லியோ என பெயரிடப்பட்ட படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம், LCU வகை திரைப்படமா இல்லையா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இப்படத்தின் முதல்கட்ட காஷ்மீரில் நடைபெற்று நிறைவடைந்தது. அடுத்த கட்ட பட்டப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது. மேலும், கமல், விஜய் என உச்ச நட்சத்திரங்களை வைத்து நல்ல கதையம்சத்தில் படங்களை எடுப்பதால் இவர் மீதான எதிர்பார்ப்பு சமீப காலங்களில் வெகுவாக உயர்ந்துவிட்டது. 

மேலும், இவரது இயக்கத்தில் ஒரு படத்தை தனது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால், இப்படம் குறித்த அறிவிப்பும், தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. மேலும், லியோ படத்தின் மீதே அதிகமானோரின் கவனம் உள்ளதால், இதனை பெரும்பாலும் கேள்விக்குட்படுத்தவில்லை. 

இந்நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, லியோ படப்பிடிப்பின் இடையில், ரஜினிகாந்தை லோகேஷ் சந்தித்தாக கூறப்படுகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது, ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘தலைவர் 170’ படத்தில் ஜெய் பீம் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் உடன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு பின்னரே லோகேஷ் படம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. 

டி.ஜே.ஞானவேலுக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்ற ரஜினி விருப்பம் தெரிவித்ததாகவும், இதனால் பட தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் (ரஜினி – லோகேஷ்) இந்த மாதம் கூடி விஷயங்களை முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளனர் என்றும் மேலும் படத்தை லோகேஷின் முந்தைய படங்களின் தயாரிப்பாளர் ஒருவரால் இப்படம் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. ஊரடங்குக்கு முன் இருவரும் கமல்ஹாசனின் தயாரிப்பில் இணையவிருந்தனர், ஆனால் கொரோனா காரணமாக படம் தாமதமானது குறிப்பிடத்தக்கது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.