“அவர்களை சேர்த்து வையுங்கள்!” – ஆரிஃப், சரஸுக்காக குரல் கொடுக்கும் நெட்டிசன்கள்!

கான்பூர்: தனது மீட்பர் ஆரிஃபை கண்டதும் வேலியிடப்பட்ட பகுதியிலிருந்து வெளியே வர முடியாமல் சரஸ், அங்கும் இங்குமாய் குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மண்ட்கா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஃப் கான். இவர் சில மாதங்களுக்கு முன்னர் காயமடைந்த சரஸை ( ஒருவகை கொக்கு இனம்) தனது பகுதியில் கண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சரஸை தனது இல்லத்திற்கு எடுத்து வந்து அதற்கு மருந்திட்டு அதன் காயத்தை குணப்படுத்தியிருக்கிறார். இதில் சரஸுக்கும், ஆரிஃப்க்கும் அழகான நட்பு மலர்கிறது. இவ்வாறே இரண்டு மாதங்கள் கடக்கிறது. சரஸை ஆரிஃப் வனத்தில் விட்டாலும் மீண்டும் அது ஆரிஃபையே தேடி வந்ததால் இருவருக்கும் இடையே இருந்த நட்பு இந்தியா முழுவதும் பேசுபொருளானது. ஆரிஃப் – சரஸ் இருக்கும் வீடியோக்களும் வைரல் ஆகின.

உத்தரப் பிரதேச வனத்துறை சட்டத்தின்படி சரஸ் வனத்தில்தான் இருக்க வேண்டும் என ஆரிஃபிடமிருந்து சரஸை பிரிந்து மார்ச் இறுதியில் சமஸ்பூர் பறவைகள் சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்தது. உத்தரப் பிரதேச அரசின் முடிவை பலரும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் தற்போது பறவைகள் சரணலாயத்தில் உள்ள சரஸை ஆரிஃப் சந்தித்த காட்சி வைரலாகி வருகின்றது. ஆரிஃபைக் கண்டதும் சரஸ் அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் அங்கும் இங்குமாக பதற்றத்துடன் ஓடுகிறது. தனது இறக்கை விரித்து ஆர்ப்பரிக்கிறது.

இக்காட்சியை கண்ட நெட்டிசன்கள் பலரும் “இது உண்மையான அன்பு. இவர்களைப் பிரிக்க வேண்டும். சரஸை மீண்டும் உ.பி அரசு ஆரிஃபிடமே ஒப்படைக்க வேண்டும்” என்று பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், பாஜகவை சேர்ந்த எம்/பி வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பறவையை ஆரிஃபுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும். அவர்களின் அன்பு தூய்மையானது. இந்த அழகான பறவை சுதந்திரமாக பறக்க வேண்டும். இவை கூண்டில் வாழ்வதற்காக அல்ல” என்று ட்வீட் செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.