கணக்காய்வு சேவை ஆணைக்குழுவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஆணைக்குழுவின் தலைவராக கணக்காய்வாளர் நாயகம் பதவிவழி அதிகாரத்தில் நியமிக்கப்படுவதுடன், கணக்காய்வாளர் நாயகம் திரு. டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன அந்த பதவியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதுமட்டுமின்றி, ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, நந்தசீலி கொடகந்த, ஞானானந்தராஜா தேவஞானம், ஏ. எம். தர்மஜித் நயனகாந்த ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.