கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக பாதிப்பு விவரம்!

இந்தியாவில் நேற்று ஒருநாள் (ஏப்ரல் 11) கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 676 ஆக இருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 12) ஒரு நாள் பாதிப்பு 7,830 ஆக அதிகரித்துள்ளது.

226 நாள்களில் இது முதன்முறை!

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி பாதிப்பு 7,946 ஆக இருந்தது. அதன் பிறகு கடந்த 223 நாட்களில் இல்லாத அளவுக்கு தற்போது தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளது.

கொரோனா நிலவரம்

இந்தியாவில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 002 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 4 ஆயிரத்து 771 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40,215 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் வாரியாக தொற்று பாதிப்பு

கேரளாவில் 1,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 919, டெல்லியில் 980, ஹரியானாவில் 595, தமிழ்நாட்டில் 401, உத்தரபிரதேசத்தில் 402, குஜராத்தில் 364, இமாச்சல பிரதேசத்தில் 420, கர்நாடகாவில் 245, ஒடிசாவில் 212, ராஜஸ்தானில் 190, சத்தீஸ்கரில் 264, பஞ்சாப்பில் 185, ஜார்கண்டில் 108, கோவாவில் 140 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மா.சுப்பிரமணியன்

முன்னதாக நேற்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் கொரோனா பரவல் குறித்து விளக்கம் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 500 அல்லது அதற்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவானால் பொதுஇடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.