ஓவர் சரக்கு உடம்புக்கு ஆகாது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான் என்று பிரிட்டனில் நடைபெற்ற சம்பவம் உணர்த்தியுள்ளது. இங்கிலாந்தின் பிளைமவுத் பகுதியைச் சேர்ந்த கோகோ என்ற இரண்டு வயது நாய்க்கு குடிப்பழக்கத்தை நிறுத்த சிகிச்சை தேவைப்பட்டது. அதற்காக போதை மறுவாழ்வு மையத்திற்கு அந்த லாப்ரடார் வகை நாய் அழைத்துவரப்பட்டது. கோகோ என்று பெயரிடப்பட்ட அந்த நாயை வளர்த்தவர் தினமும் மது அருந்தக் கூடியவர். இரவில் குடித்துவிட்டு ஒரு கிளாஸ் மதுவுடன் தூங்குவது அவரின் பழக்கமாகவும் இருந்தது. […]
