தேவையா இது..? உடலுறவின் போது விபரீத 'ஐடியா'.. உடைந்துபோன ஆணுறுப்பு..! இப்போது 'சார்' ஆஸ்பத்திரியில்..

டெல்லி:
தனது தோழியுடன் உடலுறவில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு ஆணுறுப்பு சட்டென உடைந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்

உலகில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொதுவான விஷயம் இருக்கிறது என்றால், அது பசியும், கலவியும் தான். அனைத்து விலங்கினங்களையும் போலவே மனிதர்களுக்கும் உடலுறவு என்பது இயல்பான ஒன்றுதான்.

ஆனால், அரைகுறை அறிவுடன் தேவையில்லாத, இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால்தான் அது விபரீதமாகி விடுகிறது. அப்படியொரு விபரீத சம்பவம்தான் டெல்லியில் நடந்திருக்கிறது.

மனைவிக்கு தெரியாமல்..

இந்தோனேசியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர், தனது தோழியுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருக்கிறார். இது அவரது மனைவிக்கு தெரியாது எனக் கூறப்படுகிறது. 20 நாட்களுக்கும் மேலாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா என பல இடங்களை சுற்றி பார்த்த இவர்கள், கடைசியாக கடந்த வாரம் டெல்லி வந்துள்ளனர். டெல்லியில் பல இடங்களுக்கு அவர்கள் சென்று வந்தனர். இதனிடையே, கடந்த வாரம் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து அவர்கள் தங்கியுள்ளனர்.

விபரீத யோசனை..

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, அவர்கள் உடலுறவில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபருக்கு ஆர்வமிகுதியில் இயற்கைக்கு மாறாக சில விஷயங்களை ‘ட்ரை’ பண்ண, திடீரென அவரது ஆணுறுப்பு உடைந்தது. அவ்வளவுதான். வலியில் துடித்த அவர், ஐஸ் கட்டி, வெந்நீர் என வைத்தியங்களை செய்து பார்த்தும் வீக்கமும், வலியும், ரத்தப்போக்கும் அதிகரித்துக் கொண்டே சேர்ந்தது. மேலும், அவருக்கு சிறுநீரும் கழிக்க முடியாமல் போனது.

தாக்கியது கேன்சர்.. மரணிக்கும் முன் மனைவிக்காக மருத்துவர் செய்த காரியம்.. இப்படியும் ஒரு மனிதரா..?

நள்ளிரவில் அவசர அவசரமாக..

மனைவிக்கு தெரியாமல் தோழியை அழைத்து வந்த இடத்தில், இப்படியா நடக்க வேண்டும் என தனது விதியை நொந்து கொண்ட அந்த நபர், ஆம்புலன்ஸை அழைத்து ஒருவழியாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். மருத்துவர்களிடம் என்ன நடந்தது என அவர் விவரிக்க.., மருத்துவர்களும் என்ன நடந்திருக்கும் என புரிந்து கொண்டனர். இதையடுத்து, அவரது ஆணுறுப்பை ஸ்கேன் செய்த போது அது முறிந்திருந்தது தெரியவந்தது. மேலும், சிறுநீர் குழாயும் சேதம் அடைந்திருந்தது.

“வாய்ப்பில்ல ராஜா”..

இதனைத் தொடர்ந்து, அவருக்கு தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கினர். இப்போது அவர் நலமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், இன்னும் ஒரு வருடத்திற்கு அவரால் உடலுறவில் ஈடுபட.. ‘வாய்ப்பில்ல ராஜா..’ என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அது சரி.. அண்ணனுக்கு இந்தோனேசியாவில் இருக்குது கச்சேரி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.