புதுடில்லி,: பி.எச்.இ.எல்., எனப்படும் ‘பெல்’ நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. 80 ரயில்களுக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பீடு 9,600 கோடி ரூபாய்.
வந்தே பாரத் ரயில்களைத் தயாரிப்பதற்கு, பெல் நிறுவனமும், கோல்கட்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ‘டிடாகர் வேகன்’ என்ற நிறுவனமும் இணைந்து, இந்த மிகப் பெரிய ஒப்பந்தத்தை பெற்று உள்ளன.
ஒரு ரயிலுக்கு 120 கோடி ரூபாய் என்ற மதிப்பில், 80 ரயில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த விதிமுறைகளின் படி, 35 ஆண்டுகளுக்கு இதற்கான பராமரிப்பு பணிகளையும், இந்த கூட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்படி இந்த 80 ரயில்களும், 72 மாதங்களில் தயாரித்து வழங்கப்பட உள்ளன.
Advertisement