Aishwarya Rajinikanth: தனுஷ் வீட்டு கிரஹப்பிரவேசத்தில் மகன்கள் பங்கேற்காததது ஏன்? பிரபலம் சொன்ன சீக்ரெட்!

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
தனுஷின் போயஸ் கார்டன் வீட்டு கிரஹப்பிரவேச நிகழ்ச்சியில் அவருடைய மகன்கள் இருவரும் பங்கேற்காமல் போனதற்கான காரணம் குறித்த தகவலை கூறியுள்ளார் பிரபல இயக்குநர்.

தனுஷ் ஐஸ்வர்யாநடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இனி கணவன் மனைவியாக சேர்ந்து வாழப் போவதில்லை என அறிவித்தனர். இதையடுத்து ஐஸ்வர்யா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதேபோல் தனுஷ் அவருடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.
​ Trisha: ‘த்ரிஷாவுக்கும் எனக்கும் கல்யாணம்.. லியோ படத்தில் இருந்து அவளை நீக்குங்கள்’ பரபரப்பை கிளப்பும் பிரபலம்!​
தனுஷ் வீடுதனுஷ் ஐஸ்வர்யா தம்பதியின் மகன்களான யாத்ராவும் லிங்காவும் அப்பா மற்றும் அம்மாவிடம் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டி வந்த பிரம்மாண்ட சொகுசு பங்களாவுக்கு குடி பெயர்ந்தார். இதில் தனுஷின் குடும்ப உறுப்பினர்கள், அவரது அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
​ Aishwarya Rajinikanth: அந்த புதைந்து போன குப்பை… ஐஸ்வர்யா காதல் குறித்து ரஜினி சொன்னது.. பயில்வான் பகீர்!​
முற்றிய மோதல்ஆனால் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகன்கள் பங்கேற்கவில்லை. இதேபோல் ரஜினி குடும்பத்தை சேர்ந்த யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால் தனுஷுக்கும் ரஜினிகாந்த் குடும்பத்திற்குமான பிரச்சனை முற்றிவிட்டதாகவும், அதனால்தான் பிள்ளைகளை கூட தனுஷ் வீட்டு விசேஷத்திற்கு அனுப்பவில்லை என்ற பேச்சு எழுந்தது.
​ Shakeela: அந்த நடிகர் என்னை அழிக்க பார்த்தார்… பகீர் கிளப்பிய நடிகை ஷகீலா!​
ரஜினியின் அண்ணன் இந்நிலையில் தனுஷின் பிள்ளைகள் ஏன் கிரஹப்பிரவேசத்தில் பங்கேற்கவில்லை என்ற தகவலை தனுஷின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான சுப்பிரமணியன் சிவா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதன்படி, தனுஷின் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற்ற நாளில்தான் ரஜினிகாந்த் அண்ணனின் 80ஆவது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.
​ Vijay: ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்க்கு பளார் விட்ட எஸ்ஏசி… பிரபலம் பகிர்ந்த திடுக் தகவல்!​
இதுதான் காரணம்எனவே அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மைசூர் சென்றுவிட்டார்கள். அதனால்தான் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகன்கள் கிரஹப்பிரவேசத்தில் பங்கேற்கவில்லை என கூறியதாக தெரிவித்துள்ளார். மற்றப்படி ஐஸ்வர்யாவும் தனுஷும் தேவைப்படும் போது போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் தற்காலிகமாக அவர்கள் பிரிந்துள்ளார்கள் ஆனால் நிரந்தரமாக அவர்கள் பிரிய மாட்டார்கள் என சுப்பிரமணியம் சிவா தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
​ Nayanthara: பாந்த்ரா கோட்டையில் ஸ்பாட்டான நயன்தாரா… என்ன மேட்டருன்னு பாருங்க!​
Aishwarya Rajinikanth Dhanush

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.