AL Surya: பொன்னியின் செல்வன் மண்ணோடு மண்ணாகிவிடும்… லியோ? ஏஎல் சூர்யா ஆவேசம்!

இயக்குநர், இசையமைப்பாளர், ஸ்பிரீட்சுவல் ஹீலர் என கூறிக் கொள்பவர் ஏஎல் சூர்யா. சமீப காலமாக இவர் ஊடகங்களில் அளித்து வரும் நேர்காணல்கள் கவனத்தை பெற்று வருகின்றன. குறிப்பாக தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து ஏஎல் சூர்யா கூறி வரும் ஆருடங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
Vanitha Vijayakumar: விஜய் டிவி டூ ஜீ தமிழ்.. டாப் சீரியலை தட்டி தூக்கிய வனிதா அக்கா… வேற லெவல்!

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேர்க்காணல் ஒன்றில் பேசிய ஏஎல் சூர்யா, நடிகர் விக்ரம் இன்னும் 3 மாதங்களில் இறந்துவிடுவார் என பரபரப்பை கிளப்பினார். மேலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்றும், விஜய்யில் தளபதி 67 அதாவது லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறாது என்றும் கூறினார்.

ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதேபோல் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

Aishwarya Rajinikanth: தனுஷ் வீட்டு கிரஹப்பிரவேசத்தில் மகன்கள் பங்கேற்காததது ஏன்? பிரபலம் சொன்ன சீக்ரெட்!

அடுத்ததாக லியோ படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஏஎல் சூர்யாவிடம் பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படங்களின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஏஎல் சூர்யா, பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகாது என்று தான் சொல்லவே இல்லை என்று மாற்றி பேசினார். மேலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மாமன்னர் உத்தரவுக்கு பிறகே வெளியாகும் என்றும் மண்ணோடு மண்ணாகி விடும் என்றும் வாய்க்கு வந்தப்படி உளறி கொட்டியுள்ளார். மேலும் நடக்கப்போகும் நாடகத்தை பாருங்கள் என்றும் நடிகர் விஜய் மார்கெட்டை இழந்துவிடுவார் என்றும் கூறியுள்ளார்.

Shakeela: அந்த நடிகர் என்னை அழிக்க பார்த்தார்… பகீர் கிளப்பிய நடிகை ஷகீலா!

சினிமாவில் பெரும் மாற்றம் நடைபெறும் என்றும் நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்றும் ஆருடம் கூறியுள்ளார். தன்னை மாமன்னர் என கூறிக்கொள்ளும் ஏஎல் சூர்யா, மாமன்னரை மதிக்காவிட்டால் தட்டிவிட்டு போயிட்டே இருப்பார் என ஏதேதோ வித்தைகளை காட்டி

மனநலம் பாதிக்கப்பட்டவரை போல் பேசியுள்ளார். ஏஎல் சூர்யாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.