சென்னை: சமீபத்தில் இந்தி நடிகைகளே தங்கள் குழந்தைகளுக்கு வாயில் முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருந்தனர். இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி குழந்தைக்கு தனது வாயில் இருந்து குழந்தையின் வாய்க்கு உணவுப் பொருள் ஒன்றை ஊட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
ராஜா ராணி சீரியலில் இருந்து பிரியா பவானி சங்கர் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அந்த ரோலில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து சீரியலில் அறிமுகமானார்.
அதன் பின்னர் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டிய சைத்ரா ரெட்டி சன் டிவியில் கயல் சீரியல் மூலமாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.
‘கயல்’ சைத்ரா ரெட்டி: கன்னடத்தில் 2014ல் அவுனு மாதே ஸ்ரவாணி எனும் சீரியல் மூலம் அறிமுகமான சைத்ரா ரெட்டி தொடர்ந்து பல கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் தமிழி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், ஏகப்பட்ட சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
30 வயதாகும் சைத்ரா ரெட்டி தனது அக்கா குழந்தை லயா ராகாவை கொஞ்சும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

அஜித் படத்தில்: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்தின் டீமில் இணைந்து நடித்திருப்பார் சைத்ரா ரெட்டி. அவருடன் நடித்தது பெரும் பாக்கியம் என அஜித்துடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வில்லனை சேஸ் செய்யும் காட்சியிலும் சைத்ரா ரெட்டியை பணயமாக வைத்தே நடிகர் அஜித் அந்த பயங்கரமான ஸ்டன்ட் காட்சியை செய்திருப்பார். அந்த காட்சியின் போது தான் நடிகர் அஜித்துக்கு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு இப்படி உணவு ஊட்டலாமா?: சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தனது அக்கா மகளுக்கு தனது வாயால் நொறுக்குத்தீனி ஒன்றை வைத்துக் கொண்டு குழந்தையை வாயோடு வாய் வைத்து கவ்விக் கொள்வது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். அதை பார்த்த சில நெட்டிசன்கள் குழந்தைக்கு இப்படி உணவு ஊட்டலாமா? இதெல்லாம் ரொம்ப தப்பு என சைத்ரா ரெட்டியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதை சில நடிகைகள் பழக்கமாக கொண்டுள்ள நிலையில், பாலிவுட்டிலேயே அந்த நடிகைகள் செய்வது தவறு என நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டியின் இந்த செயலுக்கும் கண்டனங்கள் குவிந்துள்ளன.